For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜப்பானில் பயங்கரம்.. நேருக்கு நேர் மோதி கடலில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்கள்! ஒருவர் பலி.. 7 பேர் மாயம்!

12:21 PM Apr 21, 2024 IST | Mari Thangam
ஜப்பானில் பயங்கரம்   நேருக்கு நேர் மோதி கடலில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்கள்  ஒருவர் பலி   7 பேர் மாயம்
Advertisement

ஜப்பான் கடற்படையின் 2 ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானாதில் ஒருவர் பலி, 7 பேர் மாயமாகியுள்ளனர்.

Advertisement

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே பசிபிக் பெருங்கடலில் அந்நாட்டு கடற்படையை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டன. அதில் தலா 4 பேர் பயணம் செய்தனர். டோக்கியோவிற்கு தெற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோரிஷிமா தீவு அருகே திடீரென்று 2 ஹெலிகாப்டர்களின் தொடர்பு துண்டானது. இதையடுத்து சம்பவ இடத்தில் 2 ஹெலிகாப்டர்களும் கடலில் விழுந்து கிடந்தது.

இரண்டு ஹெலிகாப்டர்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என ராணுவத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவரது உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 7 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள் 7 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதால், பலி எண்ணிக்கை 8 ஆக உயரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

விபத்து நடந்ததை அறிந்த மீட்பு குழுவினர் உடனேயே சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு ஹெலிகாப்டரின் தரவு ரெக்கார்டர் இரண்டு ஹெலிகாப்டர்களின் பிளேடுகள் ஆகியவை கிடைக்கப்பெற்றது. அது மட்டுமல்லாது அங்கு ஹெலிகாப்டர்களின் உதிரிபாகங்களும் காணப்பட்டது. இந்த உதிரி பாகங்கள் கடற்சார் தற்காப்பு படையின் ஹெலிகாப்டர்களின் உதிரி பாகங்களாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் சோதனையை மேற்கொண்ட மேற்கொழுவினர், இரண்டு SH - 60K ஹெலிகாப்டர்களும் நெருக்கமாக பறந்திருக்கலாம் அதனால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் கூறியிருக்கிறார்கள். மாயமான ஏழு பேரை மீட்பதற்காக MSDF 8 போர் கப்பல்களையும் ஐந்து விமானங்களையும் தேடும் பணியில் ஈடுபடுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement