For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வந்த வெளிநாட்டவர்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

It is common for foreigners from various countries to watch Jallikattu competitions. However, the fact that a foreigner came to participate in the Jallikattu competition surprised everyone.
03:08 PM Jan 16, 2025 IST | Chella
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வந்த வெளிநாட்டவர்     கடைசியில் நடந்த ட்விஸ்ட்
Advertisement

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. பொங்கலை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 3-வது நாளான இன்று (ஜன. 16) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. போட்டித் தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் உறுதிமொழி ஏற்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

Advertisement

மொத்தமாக 5,786 காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 1000 காளைகளை களமிறக்க முடிவு செய்யப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு களமிறக்கப்பட்டனர். வீரர்களுக்கான மருத்துவப் பரிசோதனையின் போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரும் கலந்துகொண்டார். யார் அவர்? என்று காவல் துறையினர் விசாரணை செய்ததில், சென்னையில் வசித்து வரும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கான் அந்தோணி கான்லான் (54) என்பது தெரியவந்தது.

அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில், அவருக்கு வயது அதிக இருப்பதால் அவரை மாடுபிடிக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதனால், அவர் சோகத்துடன் பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்தார். இதுபற்றி கான் அந்தோணி கான்லான் கூறுகையில், "நான் 14-15 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறேன். பல முறை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க வந்திருக்கிறேன். ஜல்லிக்கட்டு சிறந்த விளையாட்டு என்று நினைக்கிறேன்.

ஸ்பெயினில் நடைபெறும் காளைப் பந்தயத்தையும் பார்க்கச் சென்றிருக்கிறேன். அமெரிக்காவில் ரோடியொவிலும் காளையை அடக்கும் பந்தயம் நடைபெறுகிறது. அதையும் நான் பார்க்கச் சென்றிருக்கிறேன். இது பாரம்பரியமான விளையாட்டு. அதனால், எனக்கு மிகவும் பிடிக்கும். இதில் பங்குபெற விரும்புகிறேன். எனது உடல் நிலை நன்றாகத் தான் இருக்கிறது. நான் 26 கி.மீ., 42 கி.மீ. மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். என்னை விளையாடவிடாமல் செய்வது வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், பரவாயில்லை" என்றார்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பல்வேறு நாடுகளில் இருந்துவரும் வெளிநாட்டினர் கண்டுகளிப்பது வழக்கமானது. ஆனால், வெளிநாட்டினர் ஒருவர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துக்கொள்ள வந்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Read More : ஏடிஎம்மிற்கு பணம் நிரப்ப வந்த வங்கி ஊழியரை கொலை செய்துவிட்டு பணப்பெட்டியுடன் தப்பியோட்டம்..!! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

Tags :
Advertisement