For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தொடக்கப் பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை..!! முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

07:14 AM Nov 03, 2023 IST | 1newsnationuser6
தொடக்கப் பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை     முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Advertisement

டெல்லியில் காற்றின் தரம் கடுமையான அளவைத் தொட்டதை அடுத்து, அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளையும் அடுத்த 2 நாட்களுக்கு மூடுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

டெல்லியில் காற்று மாசு அளவு மீண்டும் உச்சம் தொட்டு வருகிறது. இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். அவை பள்ளிகள் விடுமுறை முதல் கட்டிடப் பணிகளுக்கான தடை வரை நீள்கின்றன.

டெல்லி - என்சிஆரில் அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகள் மற்றும் நகருக்குள் டீசல் டிரக்குகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ’கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான்’ - ஜிஆர்ஏபி நிலை 3 என்பவதாக குறியிடப்பட்டதை முன்னிட்டு கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன. அதிகரித்து வரும் காற்று மாசு அளவுகள் மற்றும் ஜிஆர்ஏபி நிலை 3 என்பதை செயல்படுத்துவது குறித்து, அனைத்து துறைகளின் கூட்டம் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.

இதற்கிடையே, தொடக்கப் பள்ளிகளுக்கான 2 நாள் விடுமுறையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதர வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு, உடற்பயிற்சி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு உச்சம் தொட்டதை அடுத்து சுவாசப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குழந்தைகள் நலன் நாடும் வகையில், டெல்லி அரசு தற்போது அறிவித்துள்ள தொடக்கப் பள்ளிகளுக்கான விடுமுறை, மேலும் நீட்டிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Tags :
Advertisement