தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை..? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு..?
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கிடையே, ஒவ்வொரு மாதமும் இரண்டாது சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, கோரிக்கையை பரிசீலித்த பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது. இந்நிலையில், வழக்கம் போல் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கடிதம் ஒன்று எழுதப்பட்டது. அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அனைத்து சனிக்கிழமைகளும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது. வங்கி ஊழியர்களுக்கு கூட அனைத்து ஞாயிறு விடுமுறையுடன் ஒவ்வொரு மாதமும் 2ஆம் மற்றும் 4ஆம் சனிக்கிழமைள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால், தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஆண்டுக்கு 200 வேலை நாட்கள் பணிபுரிய வேண்டும் என்று இருந்ததை இந்தாண்டு 219 நாட்களாக பள்ளிக்கல்வித்துறை உயர்த்தியுள்ளது. ஆசிரியர்கள் மீது மட்டும் ஏன் இந்த கடும் கோபம் என்று தெரியவில்லை. ஆசிரியர்களுக்கு இழைக்கப்படுவதை எங்களால் ஏற்க இயலாது. ஆகவே, அரசு ஊழியர்களைப் போன்று இனி ஆசிரியர்களுக்கும் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அறிவிக்க வேண்டும்.
இந்த முடிவினை விரைந்து எடுக்க சற்று காலதாமதம் ஆகும் என்று கருதினால், அதுவரை ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4ஆம் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில், இம்மாதம் ஆகஸ்ட் 10ஆம் தேதி இரண்டாம் சனிக்கிழமை என்பதாலும், ஆகஸ்ட் 24ஆம் தேதி நான்காம் சனிக்கிழமை என்பதாலும் இம்மாதத்தில் இந்த 2 சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர். இதனால், விடுமுறை தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு..? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!!