முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18%, தங்க பிஸ்கட்டுக்கு 3% GST..!! இதெல்லாம் என்ன நியாயம்..? புயலை கிளப்பிய கமல்..!!

11:16 AM Apr 17, 2024 IST | Chella
Advertisement

கோவை திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் போது ஜிஎஸ்டி குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "தற்போது நடைபெற இருக்கும் தேர்தல் 2-வது சுதந்திர போர். ஜூன் 4ஆம் தேதி மக்கள் கொண்டாட வேண்டும் என்றால் நல்ல முடிவை எடுக்க வேண்டும். வட மாநிலங்களில் இருந்து கோவை வரும் தொழிலாளர்களிடம் கேட்டு பாருங்கள், அவர்களுடைய மாநிலத்தின் உண்மை நிலை தெரியும். நாம் உட்கொள்ளும் பிஸ்கட்டுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், தங்க பிஸ்கட்டுக்கு வெறும் 3 சதவீதம் வரியும் விதிக்கப்படுகிறது" என்றார்.

கமல்ஹாசன் பேசிய ஜிஎஸ்டி குறித்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது. இதற்கு பாஜக ஆதரவாளர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில், "100 கிராம் பிஸ்கட் 10 ரூபா. அதுல 18% 1.8 பைசா 100 கிராம் கோல்டு பிஸ்கட் 7,61,000 ரூபா. அதுல 3% 22,830 ரூபா. இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத காரணத்தால் தான் அறிவாலயத்தில் பிஸ்கட் எதிர்பார்க்கும் நிலை" என்று விமர்சித்துள்ளார்.

மற்றொரு பயனர் ஒருவர், "தங்க பிஸ்கட் எந்த எழையும் வாங்கி சேமிப்பது இல்லை. தங்க பிஸ்கட்டுக்கு 5%க்கு பதில் 12% வட்டி போட்டா கூட, ஏழைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு வட்டி போட தேவையிருக்காது" என்று கூறியுள்ளார்.

Read More : ”இருக்குற பிரச்சனையில இது வேறயா..? ஓபிஎஸ் – பாஜக இடையே கடும் மோதல்..!! பெரும் பரபரப்பு..!!

Advertisement
Next Article