முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டிசம்பரில் 18 நாட்கள் வங்கிகள் விடுமுறை!… ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

08:28 AM Nov 27, 2023 IST | 1newsnationuser3
Advertisement

டிசம்பர் மாதத்தில் மொத்தம் 18 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Advertisement

வங்கிகளின் வேலை நேரம் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் நம்முடைய பணப்பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட முடியும். வங்கிகளின் வேலை நாட்கள் எப்போது, விடுமுறை நாட்கள் எப்போது என்று நாம் முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது. அப்போது வீண் அலைச்சலை நாம் தவிர்க்கலாம். அந்த வகையில் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவிருக்கும் டிசம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்கும், எத்தனை நாட்கள் விடுமுறை என்று பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 23 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை. அதேபோல, ஞாயிற்று கிழமைகள் விடுமுறை என்பதால் டிசம்பர் 5, 12, 19, 26 ஆகிய நான்கு நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை. டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதும் பொதுவான விடுமுறை என்பது ஒரே ஒரு நாள் மட்டுமே. டிசம்பர் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டி நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

டிசம்பர் 1 - மாநிலத் தொடக்க நாள் காரணமாக அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்தில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். டிசம்பர் 4 - புனித பிரான்சிஸ் சேவியர் திருவிழா காரணமாக கோவாவில் வங்கிகள் மூடப்படும். டிசம்பர் 12 - பா டோகன் நெங்மிஞ்சா சங்மா காரணமாக மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். டிசம்பர் 13 - லோசுங்/நாம்சுங் காரணமாக சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். டிசம்பர் 14 - லோசுங்/நாம்சுங் காரணமாக சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

டிசம்பர் 18 - உ சோசோ தாமின் நினைவு தினத்தை முன்னிட்டு மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். டிசம்பர் 19 - விடுதலை தினத்தையொட்டி கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். டிசம்பர் 26 - கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் காரணமாக மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் வங்கிகள் திறக்கப்படாது. டிசம்பர் 27 - கிறிஸ்துமஸ் காரணமாக நாகாலாந்தில் வங்கிகளுக்கு விடுமுறை. டிசம்பர் 30 - உ கியாங் நங்பாவைக் கருத்தில் கொண்டு மேகாலயாவில் வங்கிகள் திறக்கப்படாது.

Tags :
18 நாட்கள் வங்கிகள் விடுமுறைbank holiday in Decemberடிசம்பர் மாதம்ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Advertisement
Next Article