ஆசையாய் முதலிரவிற்கு சென்ற புதுமணப்பெண்; உள்ளே சென்றதும், கணவரின் குடும்பத்தினர் செய்த கொடூரம்..
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், உலகில் உள்ள அனைத்து திருமணமான புது பெண்ணுக்கும் உள்ள பயம் மற்றும் எதிர்பார்ப்புடன் அவர் தனது கணவரின் வீட்டிற்க்கு சென்றுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல், அவரது திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை.
ஆம், திருமணமான 3 மாதத்தில் அவரது கரு கலைந்தது. பின்னர், மீண்டும் அந்த பெண் கர்ப்பமான நிலையில், 9 மாதத்தில் அவரது குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. 3 ஆவது முறை அவர் கர்ப்பமான போது, அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில், தற்போது பிரியா வைத்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த குற்றச்சாட்டில், அவர் முதலிரவில் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி விவரித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது, “முதலிரவின்போது எனது கன்னித்தன்மையை பரிசோதிக்க, எனது கணவரின் குடும்பத்தினர் நடைமுறைக்கு சாத்தியமற்ற செயல்களை செய்தனர். இதனால் நான் உடலளவில் மட்டும் இல்லாமல், மனதளவிலும் பாதிக்கப்பட்டேன்” என்று இந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த இந்தூர் நீதிமன்றம், பிரியா கணவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.