For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அரியலூர்: "பெற்றோர் கண் முன்னே நடந்த கொடுமை.." 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.! குற்றவாளிகள் தலை மறைவு.!

12:47 PM Jan 16, 2024 IST | 1newsnationuser7
அரியலூர்   பெற்றோர் கண் முன்னே நடந்த கொடுமை    17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்   குற்றவாளிகள் தலை மறைவு
Advertisement

அரியலூர் அருகே 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமி அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு(20). இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்திருக்கிறார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

மேலும் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்தும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ராஜுவின் பெற்றோருக்கு தெரிந்தே நடந்திருப்பதாகவும் ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட சிறுமி கற்பம் அடைந்திருக்கிறார். 17 வயது சிறுமி கர்ப்பமான சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிந்ததால் சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து சிறுமியை மீட்ட பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த இளைஞர் ராஜூ மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை சீனிவாசன் தாய் ஜெயராணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் சீனிவாசன் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருக்கும் ராஜு மற்றும் அவரது தாய் ஜெயராணியை தீவிரமாக தேடி வருகின்றனர். 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags :
Advertisement