படிக்கும் வயதில் பெண் குழந்தையை பெற்றெடுத்த 17 வயது சிறுமி..!! பெற்றோர்களே திருமணம் செய்து வைத்த அதிர்ச்சி..!!
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் 17 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், அவர் அங்குள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்தார். இதே பகுதியில் இளைஞர் ஒருவரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சிறுமியும் இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் ஜோடி தங்களது காதலை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயத்திற்கு இருதரப்பு பெற்றோரும் முதலில் மறுப்பு தெரிவித்த நிலையில், ஒருகட்டத்தில் காதல் ஜோடியை கோவிலில் வைத்து திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இருவரும் கணவன் - மனைவியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த டிசம்பர் 11ஆம் தேதியன்று சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த விஷயம் குறித்து மகளிர் நலன் & குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் நடந்த விசாரணையில், குழந்தை திருமணம் அம்பலமாகவே, பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : செல்வமகள் சேமிப்பு திட்டம் முதல் ஜிஎஸ்டி வரி உயர்வு வரை..!! நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்..!!