முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"கர்ப்பத்தை கலைங்க" நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு; வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..

16 years was pregnant after the sexual harassment by a stanger
07:19 PM Jan 16, 2025 IST | Saranya
Advertisement

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் 26 வயதான ஜெஸ்வின். இவர் 16 வயது சிறுமி ஒருவரிடம் பாசமாக ஆசை வார்த்தைகளை பேசியுள்ளார். இதனால் சிறுமி அந்த வாலிபரை நம்பிய நிலையில், அவர் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பதறிப்போன சிறுமி, தனக்கு நடந்த கொடுமைகளை குறித்து தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

விசாரணையில், சிறுமி பூங்காவில் வைத்து பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் வாலிபரை கைது செய்த நிலையில், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். பரிசோதனையில், சிறுமி 6 வார கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சிறுமியின் எதிர்கால நலன் கருதி, கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி சிறுமியின் கர்ப்பம் கலைக்கப்பட்ட நிலையில், அந்த மாதிரியை வைத்து வாலிபரிடம் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read more: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!. வீட்டில் கொள்ளை முயற்சியின்போது நிகழ்ந்த பகீர்!.

Tags :
16 years old girlarrestsexual abuse
Advertisement
Next Article