"3 குழந்தைகளை விட, எனக்கு கள்ளக்காதலன் தான் முக்கியம்" வீட்டை விட்டு ஓடிய தாய்; இறுதியில் நடந்த கொடூர சம்பவம்!!
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் திவாகர். இவருக்கு பிந்து என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவர்கள் குடும்பமாக தெலுங்கானா மாநிலத்திற்கு குடி பெயர்ந்துள்ளனர். இதையடுத்து, திவாகர் பிளம்பர் வேலைக்கும், பிந்து வீட்டு வேலைக்கும் சென்றுள்ளார். இதனிடையே, பிந்து வேலைக்கு சென்ற இடத்தில், அங்கீத் சாகேத் என்ற நபர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களின் உறவு குறித்து ஒரு கட்டத்தில் திவாகருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அவர், வேறொரு பகுதிக்கு வீடு பார்த்து சென்று விட்டார்.
வேறு வீட்டிற்க்கு சென்று விட்டால் தனது கள்ளக்காதலனை பார்க்க முடியாது என்ற அச்சத்தில், பிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். தனது மனைவி வீட்டில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த கணவன், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, அங்கித்தின் நண்பர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கித்துக்கு போன் செய்து, நேரில் வரும் படி ஒரு இடத்திற்கு அழைத்துள்ளார். இதனால் அங்கித் தனது கள்ளக்காதலி பிந்துவுடன் அங்கு சென்றுள்ளார். அங்கு வைத்து அங்கித் தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதற்க்கிடையில், போதையில் இருந்த நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அங்கித்தின் நண்பர்கள், அங்கித்தை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். மேலும், அங்கிதின் முகத்தில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதனைப் பார்த்த அதிர்ச்சியில் உறைந்த பிந்து, அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனால் அங்கித்தின் நண்பர்கள் பிந்துவை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, மூன்று பேரை கைது செய்த நிலையில், மேலும் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.