"10 வயசுல இதெல்லாம் தேவையா?"; நண்பனின் காதலை சேர்த்து வைக்க போராடிய சிறுசுகள்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்..
குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் இருக்கும் தன்சுரா கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர், அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது தாயின் செல்போனில் இருந்து இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வந்துள்ளார். அதிக நேரம் செல்போனில் செலவிடும் அந்த சிறுமிக்கும், வேறொரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம், நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிறுமியை இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் தங்களின் மகளை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.
ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமி தனது இன்ஸ்டாகிராம் காதலனை தேடிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும், இந்த காதல் ஜோடிகளை சேர்த்து வைக்க 16 வயது சிறுவனின் 3 நண்பர்களும் உதவி செய்துள்ளனர். இதையடுத்து, சிறுமியைக் மீட்ட போலீசார், 16 வயது சிறுவனையும் அவர்களது 3 நண்பர்களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.