முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெல்டால் கட்டப்பட்டு 8 வயது சிறுமி கொலை.! 16 வயது சிறுவன் மற்றும் தந்தை கைது.! அதிர்ச்சி வாக்குமூலம்.!

12:18 PM Dec 08, 2023 IST | 1newsnationuser4
Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பூட்டிய அறையில் எட்டு வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக 16 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisement

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பேல்ஹார் என்ற பகுதியைச் சார்ந்த 8 வயது சிறுமி ஐஸ்கிரீம் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் துறையிடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில் சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த பகுதியை சோதனை இட்டபோது கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமான விசாரணையில் இறங்கினர். அப்போது அதை அடுக்குமாடி குடியிருப்பைச் சார்ந்த 16 வயது சிறுவன் தலைமறைவாய் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உண்மைச் சம்பவம் வெளியாகி இருக்கிறது. கொலை செய்யப்பட்ட சிறுமிக்கும் 16 வயது இளைஞனுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. சிறுமி அந்த இளைஞரை தொடர்ந்து கேலி செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரத்தில் அந்த சிறுமியை கொலை செய்த சிறுவன் அவரது உடலை இரண்டு நாட்களாக வீட்டில் வைத்திருக்கிறார். பின்னர் அவரது தந்தை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஆளில்லாத அறையில் சிறுமியின் உடலை மறைத்து வைத்துவிட்டு தனது மகனை வெளியூருக்கு அனுப்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து தந்தையை கைது செய்த காவல்துறையினர் அவரது மகனையும் கைது செய்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் எட்டு வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Daughterfathermaharashtrapolice investigationpolice stationson
Advertisement
Next Article