இந்தாண்டு 15,000 காலிப்பணியிடங்கள்..!! குரூப் 1 முதல் குரூப் 4 வரை..!! தேர்வர்களே ரெடியா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!
டிஎன்பிஎஸ்சி சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான போட்டி தேர்வு அட்டவணை அடுத்தவாரம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு துறைகளுக்கு ஆட்சேர்ப்பு பணியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மேற்கொண்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி சார்பில் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தி, அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
டிஎன்பிஎஸ்சியை பொறுத்தவரை ஒவ்வொரு புத்தாண்டின்போதும் அந்த ஆண்டில் நடத்தப்பட உள்ள போட்டித்தேர்வுகள், துறை வாரியாக நிரப்பப்பபடும் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடும். அந்த வகையில், தமிழ்நாட்டில் இந்தாண்டு அரசு வேலை வாய்ப்புகளுக்கான போட்டித்தேர்வு அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.
அதில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட போட்டித்தேர்வுகள் குறித்த விவரம் இடம்பெறம் என்று கூறப்படுகிறது. இந்த போட்டி தேர்வு அட்டவணை என்பது மொத்தம் 15,000 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு 10,701 பேருக்கு டிஎன்பிஎஸ்சி சார்பில் அரசு வேலை வழங்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு 15,000 பேருக்கு அரசுப் பணி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.