முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மிதக்கும் சென்னை...! தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து 1,500 தூய்மை பணியாளர்கள் சென்னை வருகை...!

06:10 AM Dec 05, 2023 IST | 1newsnationuser2
Advertisement

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இன்று 1500 தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் சென்னையை விட்டு விலகி சென்றது‌. சென்னையில் இருந்து 170 கி.மீ. வடக்கு நோக்கி விலகிச் சென்றது மிக்ஜாம் புயல். ஆந்திராவின் பாபட்லாவிற்கு தெற்கு திசையில் 150 கி.மீ. தொலைவில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது.

Advertisement

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் மிதக்கிறது. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இன்று 1500 தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். நெய்வேலி என்.எல்.சி.யில் இருந்து அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் வரவழைக்கப்பட்டுள்ளது. அதே போல சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் பகுதி வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீட்பு, நிவாரணப் பணிகளை கண்காணிக்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
Chennaicyclone AlertElectric connectionTrichy
Advertisement
Next Article