ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை பயணிக்கலாம்..!! இந்த தேதிக்குள் முன்பதிவு செய்தால் ரூ.10,000 தள்ளுபடி..!!
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் ஒருவழியாக தனது ஐகியூப் ST வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டி.வி.எஸ். ஐகியூப் ST மாடலின் விலை ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய வேரியண்ட் இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மிகப்பெரிய பேட்டரி கொண்டுள்ளது.
புதிய ஐகியூப் வேரியண்ட் இதே ஸ்கூட்டரின் 3.4 கிலோவாட்ஹவர் பேட்டரி கொண்ட வெர்ஷனை விட 40 ஆயிரம் ரூபாய் வரை விலை அதிகம் ஆகும். கடந்த 2022ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐகியூப் ST மாடல் தற்போது தான் விற்பனைக்கு வருகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே நடைபெற்று வந்தது.
அந்த வகையில், இந்த ஸ்கூட்டர் முதலில் முன்பதிவு செய்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்கூட்டரை கடந்த 2022 ஜூலை 15ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு லாயல்டி போனஸ் சலுகையின் கீழ் 10 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
புதிய ஐகியூப் ST வேரியண்ட் 3.4 கிலோவாட் ஹவர் மற்றும் 5.1 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 5.1 கிலோவாட் ஹவர் வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. புதிய ஐகியூப் ST வேரியண்டின் இரண்டு வெர்ஷன்களுடன் 950 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.