முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்ட 15 எம்பிக்கள் சஸ்பெண்ட்..!! என்ன காரணம் தெரியுமா..?

04:29 PM Dec 14, 2023 IST | 1newsnationuser6
Advertisement

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று 11ஆம் நாளாக அவை கூடியது. அப்போது, நாடாளுமன்றத்தில் நேற்று கலர் புகைக்குண்டுகள் வீசியதால் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், மதியம் 2 மணிக்கு மீண்டும் தொடங்கியது. அப்போது நாடாளுமன்றம் சபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், எஸ்.ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் ஹைபி ஈடன் உள்பட 5 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், பி.ஆர்.நடராஜன், எஸ்.ஆர்.பார்த்திபன் உள்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அவை நடவடிக்கையை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.

Tags :
கனிமொழிசஸ்பெண்ட்நாடாளுமன்றம்ஜோதிமணி
Advertisement
Next Article