குளித்துக் கொண்டிருந்த சிறுமி; ஓரமாக நின்று பார்த்த சிறுவன், பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்தவர் மணி. இவருக்கு 25 வயதான லிங்கேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், லிங்கேஸ்வரன் 15 வயது சிறுவன் ஒருவனுடன் நேற்று வெளியே சென்றுள்ளான். அப்போது அதே பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு 14 வயது சிறுமி ஒருவர் குளிக்க சென்றுள்ளார். சிறுமி தனியாக வந்திருப்பதை உறுதி செய்த லிங்கேஸ்வரன் மற்றும் சிறுவன், சிறுமியின் அருகில் சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனா்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, அலறி துடித்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினா், சம்பவ இடத்திற்கு ஓடி வந்துள்ளனர். பொதுமக்கள் வருவதை தெரிந்துக் கொண்ட இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மேலும், இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சம்பவத்தை குறித்து க.பரமத்தி மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லிங்கேஸ்வரன் மற்றும் சிறுவனை கைது செய்தனா்.