பெற்றோருடன் ரயிலில் சென்ற சிறுமி; நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, நாகை ரோடு வேட்டுக்காரத் தெருவில் 57 வயதான சுந்தரவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர், உழவன் விரைவு ரயிலில் தஞ்சாவூரில் இருந்து சென்னை சென்றுள்ளார். இதனையடுத்து, ரயில் சீர்காழி அருகே சென்ற போது சுந்தரவேலுவிற்கு அதே பெட்டியில் பயணம் செய்த 14 வயது சிறுமி ஒருவர் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரயிலில் உள்ள அனைவரும் தூங்கியதை உறுதி செய்த அவர், சிறுமியின் அருகில் சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர், தங்களின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுந்தரவேலுவை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, ரயில்வே போலீசார் சுந்தரவேலுவை மயிலாடுதுறை ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
Read more: கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த பேராசிரியர்கள்!! பீதியில் பெற்றோர்..