செப்டம்பரில் 14 நாட்கள் வங்கி விடுமுறை!. இந்த தேதிகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்!. முழு தகவல் இதோ!
Bank Holidays: ரிசர்வ் வங்கி செப்டம்பர் மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி மாதம் மாதம் அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களுக்கான பட்டியலை வெளியிடும். அவ்வகையில் செப்டம்பர் மாதம் அரசு விடுமுறை தினங்கள், இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுடன் சேர்த்து 14 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2024 வங்கி விடுமுறையின் முழுமையான பட்டியல்: 07 செப்டம்பர் 2024, சனிக்கிழமை - விநாயக சதுர்த்தி, 08 செப்டம்பர் 2024, ஞாயிறு - நுவாகாய்- ஒடிசா, 13 செப்டம்பர் 2024, வெள்ளி- ராம்தேவ் ஜெயந்தி, தேஜா தஷ்மி - ராஜஸ்தான், 14 செப்டம்பர் 2024, சனிக்கிழமை - ஓணம் - கேரளா, 14 செப்டம்பர் 2024, சனி- 2வது சனிக்கிழமை- அனைத்து மாநிலங்களும், 15 செப்டம்பர் 2024, ஞாயிறு- திருவோணம் - கேரளா, 16 செப்டம்பர் 2024, திங்கள் - ஈத் இ மிலாத் - அனைத்து மாநிலங்களும், 17 செப்டம்பர் 2024, செவ்வாய் - இந்திர ஜாத்ரா - சிக்கிம்.
18 செப்டம்பர் 2024, புதன் - ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி - கேரளா, 21 செப்டம்பர் 2024, சனிக்கிழமை - ஸ்ரீ நாராயண குரு சமாதி - கேரளா, 23 செப்டம்பர் 2024, திங்கள் - மாவீரர் தியாக தினம் - ஹரியானா, 28 செப்டம்பர் 2024, சனி - 4வது சனிக்கிழமை - அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
Readmore: அரசு ஊழியர்களே!. UPS புதிய ஓய்வூதியத் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!