முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’14 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்க ரெடியா’..? ’உடனே நாங்க வர்றோம்’..!! பிரேமலதா விஜயகாந்த் கண்டிஷன்..!!

04:21 PM Feb 07, 2024 IST | 1newsnationuser6
Advertisement

பிப்.12 ஆம் தேதிக்குள் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இதுவரை கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து களம் காண பெரும்பாலான தேமுதிக நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது. முந்தைய தேர்தலில் தேமுதிக தனது பலத்தை நிரூபித்துள்ளதுபோல, இந்த தேர்தலிலும் நிரூபிக்கும்.

4 மண்டலங்களில் பொதுக்கூட்டங்களை இருக்கிறோம். யார் அதிக தொகுதிகளைத் தருகிறார்களோ, அவர்களுடன் கூட்டணி அமைப்போம். மக்களவைத் தேர்தலுக்காக இனிமேல் தான் குழு அமைக்கவுள்ளோம். பிப். 12 ஆம் தேதிக்குள் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். மக்களவைத் தேர்தலில் 14 தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை இடம் தரும் கட்சியுடன்தான் கூட்டணி" என்று தெரிவித்தார்.

Tags :
தேமுதிக பொதுச்செயலாளர்நாடாளுமன்ற தேர்தல்பிரேமலதா விஜயகாந்த்
Advertisement
Next Article