For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,320 குறைந்த தங்கம் விலை..!! நகைக்கடைக்கு படையெடுக்கும் மக்கள்..!!

Today (Nov.07), the price of 22 carat ornamental gold in Chennai fell by Rs.1,320 to Rs.57,600.
10:18 AM Nov 07, 2024 IST | Chella
ஒரே நாளில் சவரனுக்கு ரூ 1 320 குறைந்த தங்கம் விலை     நகைக்கடைக்கு படையெடுக்கும் மக்கள்
Advertisement

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை, ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.1320 சரிந்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ஆபரணத் தங்கத்தில் விலையில் புதிய மாற்றம் ஏற்பட்டது. இதற்கு முன் இல்லாத அளவு, தங்கத்தின் விலை உயர்ந்ததால், நகை வாங்குபவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீபாவளி முடிந்துவிட்ட நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நவ,5ஆம் தேதி தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது.

இதற்கிடையே நேற்று (நவ.6) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,920-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,365-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (நவ.07) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.7,200-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை, ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.1,320 சரிந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல், சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 102 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 1,02,000-க்கு விற்பனையாகிறது.

Read More : திமுக அரசை கண்டித்து திடீரென ஆர்ப்பாட்டத்தை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!! வரும் 16ஆம் தேதி எல்லோரும் வந்துருங்க..!!

Tags :
Advertisement