2024 ஜனவரி மாதத்திற்குள் 12 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்..!! விலையும் இவ்வளவு கம்மியா..?
2024ஆம் ஆண்டின் முதல் மாதமே களைகட்டுகிறது. ஏனென்றால், ஜனவரி 4 முதல் ஜனவரி 23ஆம் தேதிக்குள் மொத்தம் 12 புதிய ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. என்னென்ன மாடல்கள் எந்த தேதியில் என்ன விலைக்கு அறிமுகமாகும்? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ரெட்மி நோட் 13 சீரிஸ் (Redmi Note 13 Series): ஜனவரி 4 ஆம் தேதி அன்று அதன் ரெட்மி நோட் 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் கீழ் ரெட்மி நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும். விலை விவரங்களை பொறுத்தவரை, ரெட்மி நோட் 13 ஸ்மார்ட்போன் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகும். 6ஜிபி + 128ஜிபி, 8ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 256ஜிபி. இவைகளின் எம்ஆர்பி முறையே ரூ.20,999, ரூ.22,999 மற்றும் ரூ.24,999 ஆக இருக்கலாம். விற்பனை விலை எம்ஆர்பி-ஐ விட குறைவாகவே இருக்கும். இது ரூ.18,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகமாகலாம்.
அதேபோல், ரெட்மி நோட் 13 ப்ரோ மாடலும் 8ஜிபி + 128ஜிபி, 8ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 256ஜிபி என் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகமாகும். இவைகளின் எம்ஆர்பி முறையே ரூ.28,999, ரூ.30,999 மற்றும் ரூ.32,999 ஆக இருக்கலாம். கடைசியாக உள்ள ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனும் 8ஜிபி + 256ஜிபி, 12ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 512ஜிபி என் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகும். இவைகளின் எம்ஆர்பி முறையே ரூ.33,999, ரூ.35,999 மற்றும் ரூ.37,999 ஆக இருக்கலாம்.
விவோ எக்ஸ்100 சீரீஸ் (Vivo X100 Series) : ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகிவிட்ட விவோ எக்ஸ்100 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 4 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகிறது. விவோ எக்ஸ்100 சீரிஸின் கீழ் விவோ எக்ஸ்100 மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ என 2 மாடல்கள் அறிமுகமாக உள்ளன. விலை விவரங்களை பொறுத்தவரை விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.63,999-க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். விவோ எக்ஸ்100 ப்ரோவின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,999-க்கு அறிமுகமாகலாம்.
ஒப்போ ரெனோ 11 சீரிஸ் (Oppo Reno 11 Series) : ஒப்போவின் புதிய ரெனோ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 10 அல்லது 11 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சரியான தேதி இன்னும் வெளியாகவில்லை. இந்த சீரிஸின்கீழ் ஒப்போ ரெனோ 11 மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும்.
ஒன்பிளஸ் 12 சீரீஸ் (OnePlus 12 Series) : ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12ஆர் மாடல்களை உள்ளடக்கிய ஒன்பிளஸ் 12 சீரீஸ் ஜனவரி 23ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. ஒன்பிளஸ் 12 ரூ.58,000 - ரூ. 60,000-க்குள்ளும், ஒன்பிளஸ் 12ஆர் ரூ.40,000 - ரூ.42,000 க்குள்ளும் அறிமுகம் செய்யப்படலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் (Samsung Galaxy S24 Series) : சாம்சங்கின் பிளாக்ஷிப் கேலக்ஸி எஸ்24 சீரீஸின் உலகளாவிய வெளியீடு ஜனவரி 2024 நடுப்பகுதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சரியான தேதி இன்னும் அறிவிக்கவில்லை. இந்த சீரிஸின்கீழ் கேலக்ஸி எஸ்23, கேலக்ஸி எஸ்23 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும்.