For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழக அரசு முக்கிய அறிவிப்பு...! 10-ம் வகுப்பு துணைத் தேர்வு விண்ணப்பம்...! முழு விவரம்

05:30 AM May 12, 2024 IST | Vignesh
தமிழக அரசு முக்கிய அறிவிப்பு     10 ம் வகுப்பு துணைத் தேர்வு விண்ணப்பம்     முழு விவரம்
Advertisement

நடைபெறவுள்ள ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த / வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும், தனித்தேர்வர்களிடமிருந்தும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 16.05.2024 (வியாழக்கிழமை) முதல் 01.06.2024 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 2024 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 16.05.2024 (வியாழக்கிழமை) முதல் 01.06.2024 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்களும் மற்றும் ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறாத/ வருகைப் புரியாத தனித்தேர்வர்களும் 16.05.2024 (வியாழக்கிழமை) முதல் 01.06.2024 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012க்கு முந்தைய பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்கள், மற்றும் ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் பாடத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் / வருகை புரியாதவர்கள் ஆகியோர் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர 16.05.2024 முதல் 24.05.2024 (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) வரையிலான நாட்களில் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்குச் சென்று, கட்டணம் ரூ.125ஐ பணமாக செலுத்தி பெயர்களை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த அனுமதி சீட்டை காண்பித்தால் மட்டுமே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர்.

மாவட்டக் கல்வி அலுவலகத்தில் செய்முறைத் தேர்வு செய்ததற்கான ஒப்புகைச் சீட்டைப் பெற்ற பின்னர் தனித் தேர்வர்கள் கருத்தியல் தேர்வெழுத விண்ணப்பிக்க மேற்காண் நாட்களில் சேவை மையத்திற்கு (NODAL CENTRE) சென்று செய்முறைத் தேர்வு பதிவு செய்வதற்கான ஒப்புகைச் சீட்டு மற்றும் முன்பு தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றை இணைத்து ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர் சேவை மையத்தால் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்ய இயலும்.

விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

Advertisement