10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! இந்திய ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை..!!
இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 46 காலியிடங்களை நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : இந்திய ரயில்வே
பணியிடம் : ஹூப்பள்ளி, பெங்களூரு, மைசூர்
கல்வித் தகுதி :
10 அல்லது 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேல் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு விலக்கு உண்டு.
ஊதியம் :
இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை :
ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை, உடல் தகுதி சோதனை, விளையாட்டு சோதனைகள்
விண்ணப்பிப்பது எப்படி..?
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன், அவர்கள் விரும்பிய ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொருத்தமான முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : நவம்பர் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மண்டல இரயில்வே/தலைமையக ஒதுக்கீடு : உதவிப் பணியாளர் அலுவலர்/தலைமையகம், தென் மேற்கு ரயில்வே தலைமையக அலுவலகம், பணியாளர் துறை, ரயில் சவுதா, கடக் சாலை, ஹுப்பள்ளி - 580020
மைசூர் பிரிவு ஒதுக்கீடு : மூத்த பிரிவு பணியாளர் அலுவலர், தென் மேற்கு ரயில்வே, இர்வின் சாலை, மைசூர் - 570001
ஹூப்பள்ளி பிரிவு ஒதுக்கீடு : மூத்த பிரிவு பணியாளர் அலுவலர், DRM அலுவலக வளாகம், தென் மேற்கு ரயில்வே, ஹூப்ளி - 580020
பெங்களூரு பிரிவு ஒதுக்கீடு : மூத்த பிரிவு பணியாளர் அலுவலர், DRM அலுவலக வளாகம், தென் மேற்கு ரயில்வே, பெங்களூரு - 560023
Read More : மதுபாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலா..? இனி கூண்டோடு சஸ்பெண்ட்..!! தமிழ்நாடு அரசு பகிரங்க எச்சரிக்கை..!!