முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

10, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை..!! அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..!!

04:56 PM Nov 14, 2023 IST | 1newsnationuser6
Advertisement

மழைக்கால விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement

குழந்தைகள் தின விழாவையொட்டி , தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட 114 அரசுப் பள்ளிகளுக்கு கேடயங்களும், கட்டுரை - ஓவியம் - பேச்சுப் போட்டிகளில் வென்ற 180 மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பதாகக் கூறினார். இதனை ஈடுசெய்யும் பொருட்டு மழைக்காலம் முடிந்த பிறகு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

மேலும், 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அவை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். அரசு சார்பில் அளிக்கப்படும் நீட் தேர்வுக்கான பயிற்சிக்கு 46 ஆயிரத்து 216 மாணவர்களும், ஜே.இ.இ பயிற்சிக்கு 29 ஆயிரத்து 279 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

Tags :
அமைச்சர் அன்பில் மகேஷ்பள்ளிகள்பள்ளிக்கல்வித்துறைமாணவர்கள்
Advertisement
Next Article