முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு..!! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

08:41 AM Dec 27, 2023 IST | 1newsnationuser6
Advertisement

நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு படித்து வரும் தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வு எழுத இன்று டிசம்பர் 27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மார்ச்‌ / ஏப்ரல்‌ 24, 10ஆம்‌ வகுப்பு / மேல்நிலை முதலாம்‌ ஆண்டு / இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே நேரடித்‌ தனித்தேர்வராக மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்‌ தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தேர்வர்கள்‌ தற்போது மேல்நிலை 2ஆம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதவும், 1ஆம்‌ ஆண்டு தேர்வில்‌ தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும்‌ எழுதவும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்‌.

மார்ச்‌ மற்றும் ஏப்ரல்‌ மாதம் 10ம்‌ வகுப்பு / மேல்நிலை முதலாம்‌ ஆண்டு, 2ம்‌ ஆண்டு பொதுத்‌தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று டிசம்பர் 27ஆம் முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்கக சேவை மையங்களுக்கு நேரிலோ ஆன்லைன் மூலமோ பதிவு செய்து கொள்ளலாம்‌. விண்ணப்பிக்கத்‌ தவறுவோர் ஜனவரி 11, ஜனவரி 12 இரு நாட்களில்‌ தேர்வுக்‌ கட்டணத்துடன்‌ கூடுதலாக ரூ.1000/- , ரூ.500/- சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்துக்‌ கொள்ளலாம்‌.

8ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்கல்வி மாணவர்கள்‌ 10ஆம்‌ வகுப்பு தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலப்‌ பாடத்‌ தேர்வுகளுக்கும்‌, 10ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்கல்வி மாணவர்கள்‌ மேல்நிலை முதலாம்‌ ஆண்டுக்கான தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலப்‌ பாடத்‌ தேர்வுகளுக்கும்‌ அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்கக சேவை மையங்களின் மூலம் மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ விண்ணப்பிக்கலாம்‌ என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

Tags :
அரசுத் தேர்வுகள் இயக்குநரகம்தனித்தேர்வர்கள்பொதுத்தேர்வுவிண்ணப்பம்
Advertisement
Next Article