'109 கி.மீ வேகம்'! கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்தது எப்படி?. உதவி எண்கள் அறிவிப்பு!.
Train Accident: திருவள்ளூர் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக மோதியதில் விபத்து ஏற்பட்டது. வேகமாக மோதியதால் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்தன. பயணிகள் விரைவு ரெயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டிகளிலிருந்தவர்களால் வெளியில் வர முடியவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் உள்ளூர்வாசிகள் போராடி தீயை அணைத்தனர் பயணிகள் மீட்டனர். இந்த ரயில் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விபத்து குறித்து தகவல்களை அறிந்து கொள்வதற்கான உதவி எண்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 044-25330952, 044-25330953, 044-25354995 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ''109 கி.மீட்டர் வேகத்தில் பாக்மதி விரைவு ரயில் சென்றிருக்கிறது. அப்போது எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு லூப் லைனில் சிக்னல் கிடைத்திருக்கிறது. அதனால்தான் அதே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியிருப்பதாக" தெரிவித்தனர்.
Readmore: விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு…