For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

TNPSC: மொத்தம் 14,353 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை...! தேர்வாணையம் அறிவிப்பு

10,701 people have been selected for various posts in 2024 by the Tamil Nadu Public Service Commission.
06:15 AM Jan 01, 2025 IST | Vignesh
tnpsc  மொத்தம் 14 353 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை     தேர்வாணையம் அறிவிப்பு
Advertisement

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 2024ல் பல்வேறு பணிகளுக்கு 10,701 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 14,353 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம், 2024ம் ஆண்டு 10,701 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 14,353 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்துக்கொள்வதற்காக டிசம்பர் 2024-ல் வெளியிடப்பட வேண்டிய 2025-ம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத்திட்டம், 2 மாதங்களுக்கு முன்பாக அக்டோபர் மாதத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி பணிகளின் முதன்மைத் தேர்விற்கான தேர்வுத்திட்டம் கொள்குறிவகையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-தொகுதி 2 பணிகள் மற்றும் தொழில்நுட்பத் தேர்வுகளில் சம்பள ஏற்ற ஏற்ற முறை 17 முதல் 20 வரை உள்ள பதவிகளுக்கு நேர்முகத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளின் முதல்நிலை தேர்விற்கான பொதுத்தமிழ் பாடத்திட்டம் மற்றும் குரூப் 4 பணிகளின் தமிழ் தகுதி தேர்விற்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நடத்தும் முறைகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதமாக, 1,49,971 தேர்வர்கள் விண்ணப்பித்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பப்பணிகள் தேர்வுகளில்(நேர்முகத்தேர்வு பதவிகள், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள், பட்டயப்படிப்பு தொழிற்பயிற்சி தரம்) 103 பாடத்தாள்களுக்கான தேர்வுகள் கணினி வழித்தேர்வாக நடத்தப்பட்டுள்ளன.ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகளில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் முறையை எளிமைப்படுத்த அரசு இ-சேவை மையங்கள் மூலம் மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யமுடியும் என்ற நடைமுறை மாற்றியமைக்கப்பட்டு தேர்வர்கள் தாங்களாகவே சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வழிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வர்கள் எளிதாக பாடத்திட்டங்கள் தொடர்பான விவரங்களை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் விதமாக, 120 பாடத்தாள்களுக்கான பாடத்திட்டங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.அனைத்து ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் மற்றும் தொழில்நுட்பப்பணிகளுக்கான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்களுக்கு தேர்வு தொடர்பான துல்லியமான மற்றும் முழுமையான தகவல்களை வழங்கும் பொருட்டு தேர்விற்கான அறிவிக்கையின் வடிவம் மாற்றியமைக்கப்பட்டு, வெவ்வேறு பதவிகளுக்கான தகுதி நிபந்தனைகள் தேர்வு நடைமுறை இணையவழியில் விண்ணப்பிக்கும் முறை, சிறப்பு பிரிவினர்களுக்கான சலுகைகள் மற்றும் இடஒதுக்கீடு சான்றிதழ்களின் படிவங்கள், பாடத்திட்டம் மற்றும் தேர்வு எழுதும்போது தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பான விவரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தேர்வர்கள் தேர்வு தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் மற்றும் டெலிகிராம் சேனல் தொடங்கப்பட்டு தகவல்கள் தேர்வர்களுக்கு விரைவாக வழங்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement