For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'1000 ஆண்டுகள்' பழமையான விஷ்ணு சிலை, சிவலிங்கம்.. அயோத்தி ராமர் சிலை போன்ற தோற்றம்.! கர்நாடகாவில் கண்டுபிடிப்பு.!

01:30 PM Feb 07, 2024 IST | 1newsnationuser4
 1000 ஆண்டுகள்  பழமையான விஷ்ணு சிலை  சிவலிங்கம்   அயோத்தி ராமர் சிலை போன்ற தோற்றம்   கர்நாடகாவில் கண்டுபிடிப்பு
Advertisement

கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணா நதியில் இருந்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான விஷ்ணு மற்றும் சிவலிங்க சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் ராய்ச்சூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியின் மேல் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தக் கட்டுமான பணிகளின் போது பல நூற்றாண்டுகள் பழமையான விஷ்ணு சிலை மற்றும் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

சிலைகள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து தொழிலாளர்கள் இது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த தொழிலாளர்கள் விஷ்ணுவின் தசாவதார சிலைகள் மற்றும் சிவலிங்கம் ஆகியவை கட்டுமானம் நடைபெற்ற இடத்தில் கிடைத்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இங்கு கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை கடந்த மாதம் அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராம் லாலாவின் சிலையைப் போன்று இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சிலையை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருப்பதாக பண்டைய வரலாற்று மற்றும் தொல்லியல் பேராசிரியர் டாக்டர் பத்மஜா தேசாய் தெரிவித்துள்ளார். ஒரு பீடத்தின் மீது வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிற்பத்தை சுற்றிலும் ஒளிரும் ஒளியுடன் கூடிய மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் மத்ஸ்ய, கூர்மா, வராஹா, நரசிம்மா, வாமனன், ராமர், கிருஷ்ணர், புத்தர் மற்றும் கல்கி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். சிலைகளின் நிற்கும் தோரணை ஆகமங்களில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement