For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

100% வாக்கு பதிவு செய்த கிராம மக்கள்...! மாவட்ட தேர்தல் அதிகாரி பாராட்டு...!

06:20 AM Apr 27, 2024 IST | Vignesh
100  வாக்கு பதிவு செய்த கிராம மக்கள்     மாவட்ட தேர்தல் அதிகாரி பாராட்டு
Advertisement

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தின் பெல்தங்கடி தாலுகாவில் உள்ள பஞ்சருமலே என்ற உள்குக்கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த குக்கிராமத்தில் 111 வாக்காளர்கள் உள்ளனர், அவர்கள் அனைவரும் ஒரே வாக்குச் சாவடிக்கு வந்து, மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக வாக்களித்து சென்றனர்.

Advertisement

இந்த குக்கிராமத்தில் வனவாசிகள், பழங்குடியினர் விவசாயிகள் மற்றும் சிறு வன கழிவுகளை சேகரிப்பவர்கள் வசிக்கின்றனர். மின்சாரம் மற்றும் போக்குவரத்து இணைப்பு இல்லாத போதிலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள வற்றாத நீர் ஆதாரங்களில் இருந்து வரும் தண்ணீரைப் பயன்படுத்தி மக்கள் காடுகளில் உயிர்வாழ்கின்றனர். மக்கள் தங்கள் தாலுகா தலைமையகமான பெல்தங்கடியை அடைய முடிகெரே வழியாக பேருந்தில் பயணிக்க வேண்டும் அல்லது அடர்ந்த காடுகளின் வழியாக எட்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும்.

நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் நடந்து வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், மாவட்ட வாக்குச் சாவடி புள்ளிவிவரங்களின் படி பஞ்சருமாலே கிராம மக்கள் 99 சதவீத வாக்குகளைப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement