சற்றுமுன்...! கலைஞர் பெயரில் 100 ரூபாய் நினைவு நாணயம்...! வரும் 17-ம் வெளியீட்டு விழா...!
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வரும் 17ஆம் தேதி, சென்னையில் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
இந்தியாவில் மத்திய அரசால் நினைவு நாணயங்கள் வெளியிடும் முறை கடந்த 1964ல் துவங்கப்பட்டது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்காக முதல் நினைவு நாணயம் வெளியானது. இதை தொடர்ந்து இந்த நினைவு நாணயங்கள் முக்கியத் தலைவர்கள் மற்றும் நிகழ்வுகளுக்காக வெளியாகின்றன. இவற்றை, மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடுகிறது.
இந்த வகையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான திமுகவின் தலைவருக்காக ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர்.எம்.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது. இதற்காக, தமிழக அரசு சார்பில் ரூ.100 மதிப்பில் நினைவுக்காசு வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் கோரப்பட்டிருந்தது. அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வரும் 17ஆம் தேதி, சென்னையில் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். சென்னை கலைவாணர் அரங்கில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட உள்ள இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.