ரூ.100 கோடி மோசடி..!! தலைமறைவான மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!! விரைந்தது தனிப்படை..!!
ரூ.100 கோடி நிலமோசடி புகாரில் முன்னாள் அமைச்சரும், அதிமுக கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில், நிலமோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனால் தான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று நினைத்த விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த கரூர் முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பதால், தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய தமிழக தனிப்படை போலீசார் வடமாநிலங்களுக்கு விரைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ரயில் பயணிகளுக்கு செம குட் நியூஸ்..!! இனி ரொம்ப ஈசி..!! தெற்கு ரயில்வே மாஸ் அறிவிப்பு..!!