For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

லாட்டரியில் அடித்த 10 ஆயிரம் கோடி! புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு அடித்த ஜாக்பாட்! யார் அந்த லக்கி மேன்?

07:10 PM May 02, 2024 IST | Mari Thangam
லாட்டரியில் அடித்த 10 ஆயிரம் கோடி  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு அடித்த ஜாக்பாட்  யார் அந்த லக்கி மேன்
Advertisement

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு லாட்டரியில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஜாக்பாட் அடித்திருப்பது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்தவருக்கு ஒரே நாளில் கோடி கோடியாய் கொட்டியுள்ளது.

Advertisement

லாவோஸ் நாட்டை சேர்ந்த செங்சைபன் என்ற 46 வயதான நபர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அமெரிக்காவின் ஒரேகானில் தற்போது வசித்து வரும் செங்சைபன் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையை கடந்த 8 ஆண்டுகளாக எடுத்து வந்தாலும், வாழ்வின் இறுதிக்கட்டங்களை எண்ணிக் கொண்டு இருந்துள்ளார்.

அப்படியிருக்கையில் சமீபத்தில் ஒரேகான் பகுதியில் பவர்பால் லாட்டரியில் ஒரு 100 டாலருக்கு லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார் செங்சைபன். உடலில் கேன்சரை கொடுத்த வாழ்க்கை லாட்டரியில் அவருக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளது. செங்சைபன் வாங்கிய லாட்டரிக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 1.3 பில்லியன் டாலர்கள் பரிசாக கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் இந்த தொகை ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேலானது.

தான் பவர்பால் ஜாக்பாட் வென்றது குறித்து பேசியுள்ள செங்சேபன், தன்னால் தற்போது தனது குடும்பத்தை ஆசீர்வதிக்க முடியும் என்றும் தனக்காக ஒரு நல்ல மருத்துவரை நியமிக்க முடியும் என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார். நிறைய நிதி சிக்கல்களை எதிர்கொண்டதால், உதவிக்காக கடவுளிடம் எப்போதும் பிரார்த்தனை செய்ததாகவும் செங் சபேன் தெரிவித்துள்ளார்.

தற்போது கடவுள் அருளால் கிடைத்துள்ள பணத்தில் தனது கனவு இல்லத்தை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், மீண்டும் வெற்றி பெறும் நம்பிக்கையில் தொடர்ந்து பவர்பால் விளையாடுவதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் தனது மனைவி மற்றும் நண்பருடன் சேர்ந்து ஏப்ரல் 7ம் தேதி டிராவிற்காக 20க்கும் மேற்பட்ட பவர்பால் டிக்கெட்டுகளை வாங்கியதாக அவர் கூறினார்.

Tags :
Advertisement