புற்றுநோய்க்கு சுயமாக மருத்துவம்..!! மரணம் வரை சென்று திரும்பிய மருத்துவர்..!! அப்படி என்ன சிகிச்சை..?
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் மருத்துவ பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்கோலியர். இவர், கடந்தாண்டு போலந்தில் இவர் வசித்து வந்தபோது 57 வயதில் 4-ம் நிலை மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இந்தப் புற்றுநோயால் 12 மாதங்கள் வரை மட்டுமே உயிர் வாழ முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால், இவர் தனது சொந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் ஓர் அற்புதமான சுய சிகிச்சையை மேற்கொண்டு புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளார். அதாவது, மெலனோமா (Melanoma) எனும் தோல் புற்றுநோய் குறித்து படிக்கும்போது, அவர் உருவாக்கிய பரிசோதனை சிகிச்சையை தனக்காக முயற்சி செய்ய முடிவு செய்தார்.
அவரின் சுய சிகிச்சைக்குப் பின்னர் சமீபத்தில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்திருக்கிறார். அந்த ஸ்கேனில் புற்றுநோய் கட்டிக்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை. இவர் தன் நண்பரும் சக ஊழியருமான பேராசிரியர் ஜார்ஜினா லாங்குடன் இணைந்து பணியாற்றினார். இவர்கள் இருவரும் மெலனோமா இன்ஸ்டிட்யூட் ஆஸ்திரேலியாவின் இணை இயக்குநர்கள். இவர்களின் தற்போதைய கண்டுபிடிப்புக்காக புகழ்பெற்ற `ஆஸ்திரேலியன் விருது' வழங்கி அங்கீகரிக்கப்பட்டனர்.
என்ன சிகிச்சை..? உடலின் நோயெதிர்ப்பு அமைப்பானது புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதனால். இவர்கள் நோயெதிர்ப்பு சிகிச்சையை முயற்சித்துள்ளனர். பேராசிரியர் ஜார்ஜினா லாங் மற்றும் அவரின் குழுவினர், கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு முன்னர், சில மருந்துகளை இணைத்துக் கொடுக்கும்போது நோயெதிர்ப்பு சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறிந்தனர். கடந்தாண்டு அறுவை சிகிச்சைக்கு முன் கூட்டு நோயெதிர்ப்பு சிகிச்சையை ஸ்கோலியர் பெற்றார். இதன் மூலம் சிகிச்சையை பெற்ற முதல் மூளை புற்றுநோயாளியாக ஸ்கோலியர் ஆனார்.
இந்தச் சிகிச்சைக்குப் பின் வலிப்பு, கல்லீரல் பிரச்னைகள் மற்றும் நிமோனியா போன்றவற்றை அவர் எதிர்கொண்டார். இருந்தபோதும், இந்தக் கஷ்டங்களுக்குப் பிறகு தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறியுள்ளார். ”உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், முன்பைவிட நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். என்னுடைய மூளைப் புற்றுநோய் குணமாகிவிட்டது என்று அர்த்தம் இல்லை. ஆனால், அது திரும்பி வரவில்லை என்பதை அறிவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால் என் மனைவி கேட்டி மற்றும் என் 3 குழந்தைகளுடன் என் வாழ்க்கையை அனுபவிக்க இன்னும் சிறிது நேரம் கிடைத்துள்ளது" என்று பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்கோலியர் கூறியுள்ளார்.
Read More : பிஎஃப் ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்..!! 3 முதல் 4 நாட்கள் தான்..!! வெளியான அறிவிப்பு..!!