முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Heart Attack | மாரடைப்பை தடுக்க தினமும் கடைபிடிக்க வேண்டிய 10 வழிமுறைகள்.!!

01:18 PM Apr 21, 2024 IST | Mohisha
Advertisement

Heart Attack: இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு மற்றும் இதய நோய் மனிதர்களை மிகவும் அச்சுறுத்து ஒன்றாக இருக்கிறது. மிகவும் இள வயதிலேயே இதய நோயாளியாக மாறி வருகின்றனர் . நன்றாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் நபர்கள் கூட 30-35 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கின்றனர்.

Advertisement

காலை மாலை வேலைகளில் உடற்பயிற்சி செய்து வியர்வை சிந்தி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்களுக்கு கூட ஒரே இரவில் மாரடைப்பு(Heart Attack) ஏற்பட்டு மரணம் சம்பவிக்கிறது. இதுபோன்ற சூழலில் 30 வயதை கடந்த ஒவ்வொருவரும் 6 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் பெரும்பாலான மக்கள் அவசர வாழ்க்கை சூழ்நிலை மற்றும் பொருளாதாரம் போன்ற பல்வேறு காரணங்களால் இதய பரிசோதனையை புறக்கணிக்கின்றனர். தம் இதயத்திற்குள் என்ன நடக்கிறது நமது உடலில் கொலஸ்ட்ரால் அளவு எவ்வாறு உள்ளது என்பதை அறிவதற்கு பரிசோதனை மிகவும் அவசியம்.

நம் உடலின் ரத்த அழுத்தம் எவ்வாறு இருக்கிறது.? இதயத்தின் முக்கியமான ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா.? போன்றவற்றை தெரிந்து கொள்வதற்கு பரிசோதனை மிகவும் அவசியம். நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் அனைத்து வகையான இதய நோய்களை தடுக்கவும் கடைப்பிடிக்க வேண்டிய 10 ஆயுர்வேத பரிந்துரைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது . அவற்றை தினசரி பின்பற்றுவதன் மூலம் நம் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு நலமுடனும் வாழ வழிவகுக்கும்.

ஆயுர்வேத முறையில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க 10 குறிப்புகள்:

1. பூண்டு மற்றும் ஆளி விதைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேத மருத்துவத்தின் படி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் மாரடைப்பு அபாயத்தை குறைப்பதற்கும் இந்த விதைகள் பயன்படுகிறது .

2. 30 வயதிற்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். லிப்பிட் ப்ரொபைல் மற்றும் hs-CRP ஐயும் சரிபார்க்க வேண்டும்.

3. மாதுளை, அக்ரூட் பருப்புகள், பாதாம், ஆரஞ்சு, ப்ளாக்பெர்ரிகள், பச்சை இலைக் காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களை வாரம் இரு முறை நமது டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

4. இதய நோய் ஆபத்துகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உணவில் இலவங்கப்பட்டை, மிளகு, மஞ்சள், இஞ்சி, பெருஞ்சீரகம், ஏலக்காய், கொத்தமல்லி போன்ற மசாலாப் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளவும்.

5. 40 வயதிற்குப் பிறகு, கண்டிப்பாக 'அர்ஜுனா' மூலிகையிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை தேநீரை உட்கொள்ளத் தொடங்குங்கள். இது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

6. தினமும் நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நாள் முழுவதும் உட்கார்ந்து இருப்பது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பது அவசியம். புகை பிடிப்பதை போன்று ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதும் மாரடை போடுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் ஆவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

7. மன அழுத்தம் இரத்த அழுத்தம் போன்றவை ட்ரைகிளிசரைடுகள் மற்றும் எல்.டி.எல்/கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கக்கூடும் என்பதால் மன அழுத்தம் மற்றும் ஸ்ட்ரெஸ் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

8. எண்ணெயில் வறுக்கப்பட்ட மற்றும் பொறித்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். நொறுக்கு தீனிகளை மாதம் ஒரு முறை அல்லது இரு முறை எடுத்துக் கொள்ளலாம். புகைப்படத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

9. பிற்பகல் 2 மணிக்குப் பிறகு காஃபி குடிப்பதை தவிர்க்கவும். தூங்குவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பு காஃபி குடிப்பது தூக்கக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

10. உடல் எடை மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிகமான உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.https://www.instagram.com/reel/C5dSzh-vudV/?igsh=MTZ1NGt1YnBiMTZhcQ==

Read More: மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஏராளமான போலீஸார் குவிப்பு…

Advertisement
Next Article