சற்றுமுன்...! காலை 9 மணி நிலவரப்படி 10.28% வாக்குகள் பதிவு...!
ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.28% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மக்களவைத் தேர்தலின் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது . ஒடிசா சட்டப்பேரவையின் 35 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
பீகார், ஜம்மு-காஷ்மீர், லடாக், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சில தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் கிராமப் புறங்களை ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் குறைந்த வாக்குப் பதிவே காணப்படுகின்றன.
ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.28% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன் படி,பீகார் - 8.86%, ஜம்மு & காஷ்மீர் - 7.63%, ஜார்கண்ட் - 11.68%, லடாக் - 10.51%, மகாராஷ்டிரா - 6.33%, ஒடிசா - 6.87%,மேற்கு வங்காளம் - 15.35% வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.