முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அரசுப் பணிகளில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு..!! வெளியான அதிரடி உத்தரவு..!!

The High Court has ordered the Kolkata government to ensure 1% reservation for transgenders in all government jobs in the state of West Bengal.
09:09 AM Jun 17, 2024 IST | Chella
Advertisement

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பணிகளிலும் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று கொல்கத்தா அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

3ஆம் பாலினத்தவருக்கு பாகுபாடின்றி சமமான வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில், மேற்கு வங்க அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத் துறையால் கடந்த 2022 நவம்பரில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், 2014 மற்றும் 2022இல் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றும், நோ்காணலுக்கு அழைக்கப்படவில்லை என 3ஆம் பாலினத்தவா் ஒருவா் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், அப்போது, 'மூன்றாம் பாலினத்தவா்களுக்கு தங்கள் பாலினத்தை தாமாக முடிவு செய்யும் உரிமையை உச்சநீதிமன்றம் கடந்த 2014இல் உறுதி செய்தது. மேலும், அவா்களது மூன்றாம் பாலினத்தவா் அடையாளத்துக்கு சட்டபூா்வமான அங்கீகாரம் வழங்கவும், அவா்களுக்கு கல்வி நிறுவனங்களில் மற்றும் பொது வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதையும் மத்திய, மாநில அரசுகளுக்கு உறுதி செய்ய வேண்டும்' என்ற உச்சநீதிமன்ற உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், மேற்கு வங்க அரசின் 2022-ஆம் ஆண்டு அறிவிப்பையும் சுட்டிக்காட்டி அனைத்து பொது வேலைவாய்ப்பிலும் 3ஆம் பாலினத்தவருக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யவும், மனுதாரருக்கு ஆசிரியா் நியமன கலந்தாய்வு மற்றும் நோ்காணலுக்கு அழைப்பு விடுக்கவும் வேண்டும் என கொல்கத்தா அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More : உலகின் மிக உயரமான செனாப் பாலத்தில் முதல் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி!. இந்திய ரயில்வே பெருமிதம்!

Tags :
courtkolkata
Advertisement
Next Article