For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கள்ளக்காதலனை தேடி கந்தர்வகோட்டைக்கு வந்த வடமாநில பெண்..!! பின்னாடியே வந்த கணவர்..!! நடந்தது என்ன..?

The incident of a woman from the northern state who came to Tamil Nadu in search of her fake lover has created a sensation.
12:30 PM Jun 26, 2024 IST | Chella
கள்ளக்காதலனை தேடி கந்தர்வகோட்டைக்கு வந்த வடமாநில பெண்     பின்னாடியே வந்த கணவர்     நடந்தது என்ன
Advertisement

வடமாநில பெண் ஒருவர், தன்னுடைய கள்ளக்காதலனை தேடி தமிழ்நாட்டுக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்தவர் 24 வயது இளைஞர். இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மத்தியப்பிரதேச மாநிலத்துக்கு, கூலி வேலைக்காக சென்றிருந்தார். அப்போது, 23 வயது இளம்பெண்ணுடன் அந்த இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆனால், அந்த வடமாநில பெண்ணுக்கு திருமணமாகியிருந்தது. ஆனாலும், இளைஞருடன் நெருங்கி பழகி வந்துள்ளார் அந்தப் பெண். வேலைக்கு போன இளைஞர், கொஞ்ச நாளிலேயே ஹிந்தியும் கற்றுக் கொண்டதால், அப்பெண்ணுடன் சகஜமாக பழக நேர்ந்துள்ளது.

பிறகு, மத்தியப்பிரதேசத்தில் கூலி வேலை முடிந்துவிட்டதால், அங்கிருந்து சொந்த ஊரான கந்தர்வகோட்டைக்கு அந்த இளைஞர் வந்துவிட்டார். ஆனாலும், இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், 4 நாளைக்கு முன்பு அந்த வடமாநில பெண், மத்தியப்பிரதேசத்தில் இருந்து இளைஞரை தேடி, கந்தா்வகோட்டைக்கு வந்துவிட்டார். இளைஞரின் வீட்டிலேயே கடந்த 4 நாட்களாக தங்கியிருந்தார். இதற்கிடையே, தன்னுடைய மனைவியை காணவில்லை என்று பெண்ணின கணவர், மத்தியப்பிரதேச போலீசில் புகார் அளித்துள்ளார்.

விசாரணையில், அப்பெண் இளம்பெண் தமிழ்நாட்டுக்கு கிளம்பிச் சென்றதும், கந்தர்வகோட்டையில் இளைஞருடன் தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பெண்ணின் கணவர், மத்தியப்பிரதேச போலீசாரையும், அந்த பெண்ணின் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு, தமிழ்நாட்டுக்கு வந்தார். அதேபோல, இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு, இளைஞரும் கந்தர்வக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். இப்போது கந்தர்வகோட்டை போலீஸ் ஸ்டேஷனில் மொத்த பேரும் ஒன்றுசேர்ந்தனர்.

அந்த பெண் அவராகவே விருப்பப்பட்டு கந்தர்வக்கோட்டை வந்ததாகவும், தனக்கு எதுவும் தெரியாது, அந்த பெண்ணை தமிழ்நாட்டுக்கு தான் வரசொல்லவில்லை என்றும் இளைஞர் போலீசாரிடம் கூறினான். அதுமட்டுமல்லால், கணவருடன் அந்த பெண்ணை அனுப்பி வைக்கவும் சம்மதம் தெரிவித்தார். இதற்கு பிறகு, அந்த பெண்ணும் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, அப்பெண்ணை போலீசார் மீட்டு அவரது கணவரிடம் ஒப்படைத்ததுடன், மத்தியப்பிரதேசத்திற்கு இந்த தம்பதியை அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

Read More : மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து..!!

Tags :
Advertisement