வருது.. வருது.. விலகு.. விலகு.. வந்தாச்சு ஜல்லிக்கட்டு 2024.! தேதி மற்றும் இடம் அறிவிப்பு.!
ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் உங்கள் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறும் இவற்றில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றவை..
2024 ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த வருடத்தின் ஜல்லிக்கட்டு போட்டிகள் வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மதுரை பாலமேட்டில் ஜனவரி 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மேலும் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகின்ற 17ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான காளைகள் மற்றும் மாடிப்படி வீரர்கள் பதிவு செய்வது உடல் தகுதி சோதனைகள் போன்றவற்றிற்கு துறை சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்காக மாடுகள் மற்றும் போட்டிகளுக்கான வரைமுறைகளை மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.