For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மஞ்சள் கயிறு புற்றுநோயை விரட்டுமா…! பெண்கள் கழுத்தில் அணிவதால் இவ்வளவு நன்மைகளா…!

06:51 AM Apr 05, 2024 IST | Maha
மஞ்சள் கயிறு புற்றுநோயை விரட்டுமா…  பெண்கள் கழுத்தில் அணிவதால் இவ்வளவு நன்மைகளா…
Advertisement

நாம் பாரம்பரியமாக மஞ்சள் கயிறில் தாலியை அணிவோம். அதனால் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Advertisement

தாலி கட்டுவதே அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ளவதற்காகத்தான். ஆனால் தாலியை மஞ்ச கயிறில் தான் கட்ட வேண்டுமா? ஏன் தங்கத்திலேயே தாலி போடாக்கூடாதா? அல்லது வேறு கயிறில் கட்டக்கூடாது என பல கேள்விகள் தோன்றலாம். அதிலும் இப்போதெல்லாம் தங்களின் மதிப்பை காட்டுவதாக கூறி 5பவுன் ,10பவுன் என தங்கச் சங்கிலியில் தாலியை அணிகிறார்கள். இதனால் எந்த பயனும் இல்லை. ஆராய்ச்சியாளர்களே மஞ்சள் கயிறு அணிவதன் மூலம் புற்றுநோயைத் தவிர்க்கலாம் என்று கூறுகிறார்கள்.

மஞ்சள் கயிற்றில் தாலி அணிந்திருந்தால் தினமும் குளிக்கும் போது மாங்கல்யத்திற்கு மஞ்சள் பூசி குளித்து ஆக வேண்டும். இல்லாவிட்டால் கயிற்றின் கலர் மாறிவிடும்.. அவ்வாறு மஞ்சள் பூசுவதால் பெண்களுக்கு அழகும் கூடும், நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மார்பகம், பெருங்குடல், கணையம், இரைப்பை, கல்லீரல், ரத்தம், நுரையீரல், மூளை எனப் பல புற்றுநோய் பாதிப்பிலிருந்து மஞ்சள் பாதுகாக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

'மஞ்சளின் மூலப்பொருளான கர்கியுமினுக்கு' நோய் எதிர்ப்பு, அழற்சி தடுப்பு, பூஞ்சை எதிர்ப்பு, ஒட்டுண்ணி எதிர்ப்பு, ஆண்டிமியூடாஜெனிக் ஆகிய பண்புகள் உள்ளன. கர்கியுமின் மாத்திரையை எடுத்துக்கொள்ளும்போது புற்றுநோய் வளர்ச்சி தடுக்கப்படுகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கர்ப்பம் தரித்த பெண்கள் மஞ்சள் கயிறை அணிவது தாய்க்கும் , சேய்க்கும் சிறந்த நோய் தடுப்பானாக செயல்படுகிறது.

மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக பயன்படுவதால், தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன்படுகிறது. மூடநம்பிக்கை என்று கூறாமல் மஞ்சள் கயிறை அணிந்து நம்மையும், நம்மை சுற்றி இருப்பவர்களையும் பாதுகாப்போம்.

Tags :
Advertisement