For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"மின்கட்டண உயர்வு இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசு" பாமக போராட்டம் - அன்புமணி ராமதாஸ் காட்டம்..!

'Electricity hike is a prize for winning the by-elections' protest - Anbumani Ramadoss Kattam..!
08:25 AM Jul 16, 2024 IST | Kathir
 மின்கட்டண உயர்வு இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசு  பாமக போராட்டம்   அன்புமணி ராமதாஸ் காட்டம்
Advertisement

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அரசுக்கு கிடைத்த வெற்றிக்கு பரிசு என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழகத்தில் கடந்த 2022 செப்டம்பர் 9-ம் தேதி மின்கட்டணத்தை அரசு உயர்த்தியது. அதேபோல கடந்த ஜூன் 30-ம் தேதி கட்டணம் 6 சதவீதம் உயர்த்தப்பட்து. தற்போது, 2024-25 ஆண்டுக்கான மின் கட்டணத்தை பணவீக்க விகித அடிப்படையில் மாற்றியமைத்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஜூலை 1ம் தேதி முதல் இந்த உயர்த்தப்பட்ட மின்கட்டணம் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

0 முதல் 400 கிலோ வாட் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ரூ.4.60 லிருந்து ரூ.4.80 ஆகவும், 401 முதல் 500 கிலோ வாட் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ரூ. 6.15லிருந்து ரூ.6.45ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம் உயர்வு?
0-400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60ல் இருந்து ரூ.4.80 காசுகளாக உயர்வு.
401-500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15ல் இருந்து ரூ.6.45 காசுகளாக உயர்வு.
501-600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15ல் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்வு.
601-800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20ல் இருந்து ரூ.9.65 காசுகளாக உயர்வு.
801-1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20ல் இருந்து ரூ.10.70 காசுகளாக உயர்வு.
1000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட் ரூ.11.25ல் இருந்து ரூ.11.80 காசுகளாக உயர்வு.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணம் ரூ.8.15ல் இருந்து ரூ.8.55ஆக உயர்வு.

இந்த மின் கட்டண உயர்வுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
கடுமையான விமரசங்களை முன்வைத்துள்ளார். இது குறித்து வரைந்த பதிவில், "மின்சாரக் கட்டணம் ரூ.6000 கோடிக்கு உயர்வு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசு - தமிழக மக்களின் முதுகில் குத்தி விட்டது திமுக அரசு

தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 4.83% அளவுக்கு தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.6000 கோடிக்கும் கூடுதலான வருவாய் கிடைக்கும். தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, வாழ்வாதார பாதிப்பு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தால் எடுக்கப்பட்டது என்று கூறி தமிழக அரசு தப்பித்து விட முடியாது. ஒழுங்குமுறை ஆணையம் என்பது பொம்மை அமைப்பு. தமிழ்நாடு அரசின் கண்ணசைவுக்கு ஏற்ற வகையில் செயல்படும் அமைப்பு. ஜூலை ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும் மின்கட்டண உயர்வை விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு ஜூலை 15-ஆம் நாள் அறிவித்திருப்பதிலிருந்தே இதை உணரலாம்.

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமார் ரூ.31,500 கோடிக்கு உயர்த்தப்பட்டன. ஆனாலும், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது. மின்சார வாரியத்தில் நிலவும் ஊழல், முறைகேடுகள் ஆகியவற்றை களையாமல் மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, மின்சார வாரியத்தில் ஊழல் அதிகரிக்கவே வகை செய்யும்.

ஜூலை 1-ஆம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதை சுட்டிக்காட்டி அதை கைவிட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அப்போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் குத்தியிருக்கிறது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு.

ஏற்கனவே, உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் புதிய கட்டண உயர்வு ஏழை மக்களையும், தொழில் நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும். எனவே, மின்சாரக் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும்" என அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

Read More: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு…! மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி…!

Tags :
Advertisement