For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது...! செல்வப் பெருந்தகை குற்ற வழக்கை பட்டியல் போட்ட அண்ணாமலை...!

Can't apologize for everything...! Annamalai listed the case of wealth embezzlement
07:25 PM Jul 09, 2024 IST | Vignesh
மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது     செல்வப் பெருந்தகை குற்ற வழக்கை பட்டியல் போட்ட அண்ணாமலை
Advertisement

செய்யாத தவறுக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அவர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது என அண்ணாமலை பதில் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக செல்வப்பெருந்தகை அவர்கள் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். மகாத்மா காந்தி வழி வந்த செல்வப்பெருந்தகை அவர்கள் கடந்து வந்த பாதை.

ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி, 2001 வழக்கு எண் 24(A)/2001. சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13(2) r/w 13(1) (e), 2003வழக்கு எண் 136/2003இபிகோ 307 – கொலைமுயற்சி, 2003வழக்கு எண் 138/2003 – தாக்குதல் , 2003வழக்கு எண் 277/03 – கொலை மிரட்டல் , 2003வழக்கு எண் 451/2003இபிகோ 324 – பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 – கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908. இந்த வழக்கில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள், சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள்தான். குறிப்பாக, கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டிருந்தன. இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு.

குண்டாஸ் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா? இவரை வேறு எப்படிக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? வாழும் மகாத்மா என்றா? அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?

செல்வப்பெருந்தகை அவர்கள், குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. செல்வப்பெருந்தகை அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.

Tags :
Advertisement