For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாராளுமன்றத் தேர்தல் 2024: பெரம்பலூர் தொகுதியில் களமிறங்கும் அமைச்சரின் மகன்.? திமுக நிர்வாகிகள் வலியுறுத்தல் .!

07:11 PM Feb 04, 2024 IST | 1newsnationuser7
பாராளுமன்றத் தேர்தல் 2024  பெரம்பலூர் தொகுதியில் களமிறங்கும் அமைச்சரின் மகன்   திமுக நிர்வாகிகள் வலியுறுத்தல்
Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அனைத்து கட்சிகளும் முன்புறமாக தேர்தல் வேளையில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு போன்றவற்றில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

Advertisement

இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டது. திமுகவின் சார்பில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு தொகுதி பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தை கூட்டணி கட்சிகளுடன் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் மற்றும் இதர கூட்டணி கட்சிகளுடனும் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் அமைச்சர்கள் கே. என் நேரு உதயநிதி ஸ்டாலின் தங்கம் தென்னரசு இ.வ வேலு உள்ளிட்டோரிடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் கே.என் நேருவின் மகன் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அப்பகுதி நிர்வாகிகள் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் குறித்து பெரம்பலூர் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அந்தத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான பச்சமுத்து கூட்டணியில் இருந்து விலகியதால் பெரம்பலூர் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்த நிர்வாகிகள் அமைச்சர் கே.என் நேருவின் மகன் கே.என் அருணை களம் இறக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement