பயணத்திற்கு முன் ரயில் டிக்கெட் தொலைந்து விட்டதா? இனி பயப்பட வேண்டாம்.. இதை செய்யுங்கள்!
முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை நீங்கள் தொலைத்துவிட்டால் பணம் செலவழிக்காமல் அபராதம் கட்டாமல் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
முன்பதிவு செய்த டிக்கெட் ஏதோ ஒரு சில காரணங்களால் தொலைந்துவிட்டாலோ அல்லது அவசரத்திற்கு கையில் கிடைக்கவில்லை என்றாலோ நமக்கு இழப்பு ஏற்படும். டிக்கெட் சோதனையின் போது காட்டவில்லை என்றால் நாம் அபராதம் செலுத்த நேரிடும். அதே நேரத்தில் பயணமும் செய்ய வேண்டும். அபராதம் கட்டக்கூடாது என்ன செய்யலாம்.
இப்படி ஆனால் அதற்கு மாற்று வழிகள் உள்ளன. ரயில்வே அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்தோ நேரடியாக டிக்கெட் பெற்றோ பயணம் செய்யலாம். ஆன்லைன் வசதி இருந்தும் சிலர் நேரில் டிக்கெட் பெற்று பயணம் செய்கின்றனர். முன்பதிவு இல்லை என்றால் நேரடியாக டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்கிக் கொண்டால் போதும். பயணம் முடியும் வரை டிக்கெட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் டிக்கெட் முன் பதிவு செய்தவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. ஏனெனில் பி.என்.ஆர். நம்பர் போதும். டிக்கெட் இல்லை என்றாலும் கூட அடையாள அட்டையை காண்பித்தால் போதும். ஒருவேளை கவுண்டரில் முன்பதிவு செய்த டிக்கெட் தொலைந்துவிட்டால் பதற்றம் அடையத் தேவையில்லை. டிக்கெட்டை பெற்று பயணம் செய்ய மாற்றுவழி உள்ளது. பயணத்திற்கு முன்பு டிக்கெட்டை தவறவிட்டால் டியூப்ளிகேட் நகல் பெற்றுக் கொள்ள வசதி உள்ளது.
அடையாள அட்டையை காட்டி இந்த டிக்கெட்டை பெற முடியும். இதற்காக ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். இதர வகுப்புடிக்கெட் ரூபாய் 100 செலுத்தினால் டிக்கெட் பெறலாம். சார்ட் தயாரான பின்னர் டிக்கெட் தொலைந்தால் பயணக்கட்டணத்தில் பாதி கட்டினால் பயணம் செய்யலாம். ஒருவேளை டிக்கெட் கிடைத்துவிட்டால் ரயில் புறப்படும் முன்பே கவுண்டரில் சென்று பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக 5சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
Read more ; Paavo Nurmi Games 2024!. ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்!. ஒலிம்பிக் போட்டிக்கு தயாரான நீரஜ் சோப்ரா!