For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திக் திக்... சென்னையை நோக்கி அடுத்த வாரம் புயல் வருமா..‌.? தனியார் வானிலை மைய நிபுணர் பிரதீப் முக்கிய தகவல்...!

06:10 AM Dec 07, 2023 IST | 1newsnationuser2
திக் திக்    சென்னையை நோக்கி அடுத்த வாரம் புயல் வருமா  ‌   தனியார் வானிலை மைய நிபுணர் பிரதீப் முக்கிய தகவல்
Advertisement

சென்னையை நோக்கி அடுத்த வாரம் புயல் வரும் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது.

தமிழகத்தில் 2, 3 மற்றும் 4-ம் தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக அதிகமான மழைப்பொழிவை சந்தித்தன. ஆந்திர மாநிலத்தை நெருங்கியவுடன் நெல்லூர், ஓங்கோல் உள்ளிட்ட இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

புயல் காரணமாக, 4 மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையை நோக்கி அடுத்த வாரம் புயல் வரும் என்ற செய்தி இணையத்தில் பரவியது. அத்தகைய செய்தி பொய்யானது என தனியார் வானிலை நிபுணர் ஜான் பிரதீப் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது X பதிவில், சென்னையை நோக்கி அடுத்த வாரம் புயல் வரும் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது. இது போன்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். வரும் 10 ஆம் தேதி அரேபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. அது இந்திய கடற்கரையை விட்டு நகரும். இதற்கும் சென்னைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இதனால் சென்னை எந்த ஊரு பாதிப்பையும் சந்திக்காது என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement