டிஎன்பிஎஸ்சி குரூப்-4: தேர்வு முடிவுகளை மீண்டும் வெளியிட நீதிமன்றம் வலியுறுத்தல்.! மனுதாரர்கள் தொடர்ந்து வழக்கில் பரபரப்பு அறிவிப்பு.!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முடிவுகளை வருகின்ற ஜனவரி மாதத்திற்குள் வெளியிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் தமிழக அரசிற்கு ஆணையிட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தெருவில் நடந்த மோசடி தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கண்மணி கீதா மற்றும் முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுகள் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு ஜூன் மாதம் நடந்தது . இதில் தேர்வானவர்களின் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறவில்லை .
இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகி எங்களது உடைத்தால் நகலை கேட்டிருந்தோம். அந்த நகலும் எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் பல கேள்விகளுக்கு சரியாக விடை அளித்தும் எங்களுக்கு பணி வழங்கப்படவில்லை . தற்போது தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எங்களது ஆன்சர் கீ நகல் வேண்டும். அது கிடைக்கும் வரை எங்களது பணியிடங்களை காலியாக வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி ஆர் விஜயகுமார் டி என் பி எஸ் சி குரூப் 4 முடிவுகளை ஜனவரி எட்டாம் தேதிக்குள் மீண்டும் இணையதளத்தில் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் மனுதாரர்களை விட குறைவான மதிப்பெண் எடுத்திருந்தவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் மனுதாரர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.