வாஸ்துப்படி இந்த பொருளை எங்கு வைக்க வேண்டும் தெரியுமா..? இடம் மாறி மட்டும் வைக்காதீங்க..!!
வீட்டை சுத்தம் செய்வதற்கு அனைவரது வீட்டிலும் கட்டாயம் இருப்பது துடைப்பம். துடைப்பத்தை பயன்படுத்திவிட்டு சிலர் கிடைத்த இடத்தில் வைத்து விடுவார்கள். சிலர் வாசலில், சிலர் வீட்டிற்குள், சிலர் அடுப்பறையில் கூட வைப்பார்கள். ஆனால், வாஸ்துப்படி, துடைப்பம் வைப்பதற்கான சரியான இடம் மற்றும் திசை குறித்து பிரபல ஜோதிடர் சந்தோஷ் குமார் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதுகுறித்து தற்போது பார்ப்போம்.
அதாவது, வடமேற்கு அல்லது வடக்கு திசையே துடைப்பம் வைப்பதற்கு சரியான திசையாகும். இந்த திசையில் துடைப்பத்தை வைப்பதன் மூலம் எதிர்மறை சக்திகள் அனைத்தும் வீட்டை விட்டு வெளியேறி, மகிழ்ச்சி, அமைதி உண்டாகும் என்று கூறப்படுகிறது. வடக்கு திசை சனி பகவானின் இடமாக பார்க்கப்படுகிறது. மேலும், சுத்தத்திற்கும் அது பொறுந்துவதால் அந்த இடத்தில் துடைப்பம் வைப்பது நல்லதாகும். இந்த இடத்தில் இருந்துதான் வீட்டின் எதிர்மறை ஆற்றல் மற்றும் அழுக்கு வெளியேறுவதாக கூறப்படுகிறது.
மேலும், துடைப்பத்தை காலால் மிதிப்பது தவறு என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதனால் லட்சுமி கோபமடைவார் என்றும் சொல்லப்படுகிறது. அதே சமயம் துடைப்பம் மற்றவர்கள் கண்ணில் படுமாறு இல்லாமல் மறைவான இடத்தில் வைக்க வேண்டுமாம். மேலும், துடைப்பத்தை நிறுத்தி வைக்கக் கூடாது. படுக்க வைக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
Read More : ஆசிரியர்களுக்கே இந்த பிரச்சனையா..? அப்படியென்றால் மாணவர்களின் கதி..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!