முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

காவல்துறையில் முஸ்லீம்கள் தாடி வைக்க தடை கிடையாது...! உயர்நீதிமன்றம் உத்தரவு...!

There is no ban on beards for Muslims in the police force
06:05 AM Jul 13, 2024 IST | Vignesh
Advertisement

காவல்துறையில் முஸ்லீம்கள் தாடி வைக்க தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த முதல்நிலை காவல்துறை அதிகாரியான அப்துல் காதர் இப்ராஹிம், கடந்த 2018ம் ஆண்டு தாடி வைத்திருந்ததால் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் வழக்கு தொடர்ந்தார்.

Advertisement

இந்த வழக்கு நேற்று நீதிபதி விக்டோரியா கெளரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, காவல்துறையில் இஸ்லாமியர்கள் நேர்த்தியாக தாடி வைத்துக்கொள்ள அனுமதி உண்டு.இறைத்தூதர் நபிகளை பின்பற்றும் இஸ்லாமியர்கள் வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பது வழக்கம். பல மதங்கள், இனங்களை கொண்ட இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பு என்றார்.

மதுரையை சேர்ந்த அப்துல்காதர் என்பவர் தனது ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்ததுடன், காவல் சட்ட விதிகளில் இதற்கு அனுமதி இருப்பதாகக் கூறிய ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags :
beardshigh courtmuslimtn police
Advertisement
Next Article