உலகக்கோப்பை 2023: 3வது சதத்தை பதிவு செய்த இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா..! தெறிக்கவிடும் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள்…
உலகக்கோப்பை 2023 தொடர் இறுதிக்கட்டடத்த்தை நெருங்கியுள்ளது. அரை இறுதி பெட்டிக்குள் முதல் ஆளாகி இந்திய அணி நுழைந்துள்ளது, தென் ஆப்ரிக்க அணியும் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. மூன்றாவது நான்காவது இடத்திற்கு ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதன்படி இன்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணியின் உலககோப்பை கனவு தகர்ந்துவிடும். இந்த போட்டி முக்கியம் என்பதால் இரு அணிகளும் கடுமையாக போட்டிபோட்டு வருகிறது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கியா நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் நிதானமாக விளையாடினர், ஒரு கட்டத்தில் கான்வே 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரச்சின் ரவீந்திராவுடன் ஜோடி சேர்ந்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன். அணியின் ஸ்கோர் 248 இருந்த நிலையில் கேப்டன் கேன் வில்லியம்சன் 97 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா இந்த உலககோப்பையின் 3வது சதத்தை பதிவு செய்தார். இது அவரின் முதல் உலகக்கோப்பை தொடராகும். பிறகு 94 ரன்களில் 104 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார் ரச்சின் ரவீந்திரா.
தற்போது மிட்சேல் 29 ரன்களிலும், சாப்மேன் 30 ரன்களிலும் களத்தில் உள்ளனர். தற்போது நியூஸிலாந்து அணி 41 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்களுடன் விளையாடி வருகிறது.